மதுராந்தகத்தில் போக்குவரத்து போலீசார் நியமிக்க பயணிகள் கோரிக்கை

மதுராந்தகத்தில் போக்குவரத்து போலீசார் நியமிக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-01-28 12:05 GMT
போக்குவரத்து போலீசார் நியமிக்க பயணிகள் கோரிக்கை

மதுராந்தகத்தில் சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஏரிக்கரையின் மீது பயணியர் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. தற்போது, மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு, புதிதாக 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இதன் காரணமாக, தற்காலிக பயணியர் பேருந்து நிலையம், மதுராந்தகம் வடக்கு பைபாஸ் பகுதியில், மதுராந்தகம் நகரத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் துாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து, மதுராந்தகம் டவுன் பகுதிக்கு அதிக துாரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால், அச்சிறுபாக்கம், மேல்மருவத்துார், பெரும்பாக்கம், எல்.எண்டத்துார் வழியாக, தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் வரும் பயணியர்,

ஏரிக்கரை நிறுத்தத்தில் இறங்கி, மதுராந்தகம் டவுன் பகுதிக்கு வருகின்றனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, அப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி, சாலையை கடக்கும் பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News