பயணியர் தரையில் அமரும் அவலம்

காஞ்சிபுரத்தில் நிழற்குடை பயணியர் தரையில் அமரும் அவலம்"எனவே பயணியர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-01-20 05:38 GMT

பயணியர் தரையில் அமரும் அவலம்

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஆலடி தோப்பு பகுதியில், கீழ்கேட் பேருந்து நிறுத்தத்தில், ௨௦௦௭- 08ல், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 1 லட்சம் ரூபாய் செலவில், இருக்கை வசதியுடன் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. காஞ்சிபுரம் - உத்திரமேரூர் வழித்தடத்தில் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்தில் பயணிக்கும் பயணியர், தாங்கள் பயணம் செய்ய வேண்டிய பேருந்து வரும் வரை, நிழற்குடையில் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பயணியர் நிழற்குடையில் அமைக்கப்பட்டு இருந்த சிமென்ட் பலகை இருக்கைகள் சேதமடைந்துவிட்டன. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் நீண்ட நேரம் நிற்க முடியாமல், தரையில் அமர வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, சேதமடைந்த நிழற்குடையை புதுப்பித்து இருக்கை வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News