நடுத்தெருவில் நிற்கும் பயணிகள்
தூத்துக்குடியில் தற்காலிக ஓட்டுனரால் இயக்கப்பட்ட பேருந்து பழுதடைந்தது. மாற்று பேருந்தில் ஏற்றப்பட்ட பயணிகள் இறக்கிவிடப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.;
Update: 2024-01-10 04:54 GMT
பயணிகள் அவதி
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிக ஓட்டுனரை நம்பி அரசு பேரூந்தில் திருச்செந்தூருக்கு பயணித்த பயணிகள் பேருந்து பழுது காரணமாக தூத்துக்குடி நீதிபதிகள் குடியிருப்பு அருகே நடுரோட்டில் நின்றது என்ன செய்ய என்று தெரியாமல் தற்காலிக ஓட்டுனரும் நடத்துனரும் பயணிகளோடு நடுரோட்டில் பரிதவித்த போது அவ்வழியாக வந்த மற்றொரு அரசு பேருந்தை வழிமறித்து பழுதான பேருந்தில் இருந்த பயணிகளை அதில் ஏற்றிவிட்டனர். அப்போது, அந்த பேருந்து நடத்துனர். தற்காலிக நடத்துனர் முறையாக டிக்கெட் வழங்கவில்லை என்றும் இந்தப் பேருந்து அனைத்து இடங்களிலும் நிற்காது என்றும் பேரூந்தில் ஏறிய பயணிகளை பேருந்தில் இருந்து மீண்டும் இறக்கி நடுரோட்டில் விட்டு சென்றனர்.தற்காலிக ஓட்டுனரை நம்பி பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்