தெரேசாபுரத்தில் நிழற்குடை இல்லாததால் பயணியர் அவதி
தெரேசாபுரத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பயணியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், போந்துார் அடுத்த, தெரேசாபுரத்தில், ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையில், பேருந்து நிறுத்தம் உள்ளது. இதனருகே, உள்ள தனியார் பள்ளியில் 2,000த்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பேருந்து நிறுத்தம் வழியே, தாம்பரம் -- ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர் -- செங்கல்பட்டு உள்ளிட்ட வழித்தடத்தின் வழியே, ஏராளமான தனியார் மற்றும் அரசு பேருந்து சென்று வருகின்றன. அப்பகுதியில், இயங்கி வரும் ஏராளமான தனியார் தொழிற்சாலையில் பல ஆயிரக்கணக்கான உழியர்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லை. இதனால், பயணியர், வாட்டி வதைக்கும் கடும் வெயிலில், நிற்க வேண்டி நிலை உள்ளது. பெண்கள் குழந்தைகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள்,
முதியோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, இங்கு பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பயணியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்."