மயானத்திற்கு பாதை - இறந்தவர் உடலை அடக்கம் செய்ய மறுத்த கிராம மக்கள்

அச்சிறுபாக்கம் அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் பாதை அமைத்து தரக்கோரி இறந்தவர் உடலை அடக்கம் செய்ய மறுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-21 06:51 GMT

புகார் தெரிவிக்கும் கிராம மக்கள் 

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த பாபுராயன் பேட்டை ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு தலைமுறைகளாக, மயானத்திற்கு செல்ல நிரந்தர பாதை இல்லாததால், தனிநபர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியே, சடலத்தை கொண்டு சென்று, மயானத்தில் அடக்கம் செய்து வருகின்றனர். இது குறித்து, துறை சார்ந்த அதிகாரிகளிடம், பலமுறை மனு அளித்தும், மயானத்திற்கு செல்ல நிரந்தர பாதை அமைக்க, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சுப்பிரமணி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்ல பாதை இல்லாததால் பாதை அமைக்க கோரி உறவினர்கள் நீண்ட நேரம் உடலை எடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் அப்போது அங்கு வந்த காவல்துறையினர் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அரசு மயான பாதை பணம் கொடுத்து வாங்கி அப்பகுதி மக்களுக்கு வழங்கி உள்ளது இருப்பினும் அது தங்களுக்கு சொந்தமான இடம் என்று தனி நபர் பாதை விடாமல் அதில் தற்போது நெல் பயிர் செய்து உள்ளார்

இதனால் தொடர்ந்து இப்பகுதியில் சுடுகாடு பாதையில் நிரந்தர பாதை என்று கூறி வேண்டும் என தெரிவித்தனர் இரண்டு தினங்களுக்குள் அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்டு பாதை அமைக்கப்படும் என உறுதிமொழியை ஏற்று  பின்பு அவரது உடலை வயல்வெளி பகுதியில் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர் மயானத்திற்கு நிரந்தரமான பாதை அமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News