மகப்பேறு மருத்துவ வளாகத்தில் மிகப்பெரிய தேனீ கூட்டம்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம் நான்காவது மாடி கட்டிடத்தில் தேன் பூச்சிகள் கட்டிய மிகப்பெரிய தேன் கூடு குழந்தையுடன் உள்ள தாய்மார்கள் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
தினம்தோறும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். 800க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் மையம் ஐந்து அடுக்கு மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு 4வது மாடியில் அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு பெற்ற தாய்மார்கள சிகிச்சை பெற்று வரும் பிரிவில் பின்புறம் பார்வையாளர்கள் வந்து செல்லும் பகுதியில் மிகப்பெரிய தேன்கூடு கட்டியுள்ளது. மகப்பேறு அடைந்த தாய்மார்களையும் பிறந்த குழந்தைகளையும் தேன் பூச்சிகள் உள்ளே நுழைந்து கடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிறைய தேன் பூச்சிகள் பறப்பதால் பொதுமக்கள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தையுடன் உள்ள தாய்மார்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் தேன்கூட்டை அகற்றுவதற்கு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது கடந்த வாரத்தில் தேன் கூடு ஒன்றை அகற்றப்பட்டதாகவும், தற்போது வரை தேன்கூடு இருப்பதாக ஒருவரும் புகார் lதெரிவிக்கவில்லை என்றும் உடனடியாக தீயணைப்புத்lllதுறை மூலமாக தேன் கூட்டை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.