சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் அவதி
சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் அவதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினந்தோறும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து மருத்துவம் பார்த்து சொல்கின்றனர்.
மேலும் 10-க்கும் மேற்பட்ட படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாகும் மருத்துவமனையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தினத்தில் மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வருவதில்லை மருத்துவர்கள் யாரும் பணிக்கு வராத காரணத்தினால் நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் OP சீட்டு மட்டும் வழங்கப்பட்ட நிலையில் மருத்துவர் பரிந்துரைக்காமலே மருந்துகள் வழங்கும் அவல நிலையும் அரங்கேறி வருகிறது எனவும் இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் செய்தி சேகரிப்பதை மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்ததை தொடர்ந்து அவசர கதியில் மருத்துவமனைக்கு மருத்துவர் வந்து மருத்துவம் பார்த்தது குறிப்பிடத்தக்கது உடனடியாக மாவட்ட மருத்துவ ஆய்வாளரை தொடர்பு கொண்டு சிங்காரப்பேட்டை மருத்துவமனையின் அவல நிலை குறித்து கேட்டபோது அவர் தகவலை மறுத்து பிறகு நமது தொடர்பு துண்டித்து விட்டார்.
பிறகு உடனடியாக சிங்காரப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலரை தொடர்பு கொண்ட பொழுதும் தொடர்பை எடுக்க மறுக்கின்றார்கள். எனவே மாவட்டம் மருத்துவ நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சிங்காரப்பேட்டை மருத்துவமனைக்கு ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனை குறித்து நோயாளிடம் கேட்டறிந்து மருத்துவம் பார்க்காமல் ஞாயிற்றுக்கிழமையில் வீட்டில் இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரசவத்திற்கு பெயர் பெற்ற இந்த மருத்துவமனையில் தற்பொழுது ஓரிரு பிரசவங்கள் மட்டுமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.