போயம்பாளையத்தில் பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா!

திருப்பூர், போயம்பாளையத்தில் கும்மியாட்ட அரங்கேற்ற விழாவை கவுன்சிலர் கவிதா விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

Update: 2024-07-01 13:32 GMT

திருப்பூர், போயம்பாளையத்தில் பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா! கவுன்சிலர் கவிதா விஜயகுமார் தொடங்கி வைத்தார். திருப்பூர் போயம்பாளையம் நஞ்சப்பா நகரில் பவளக்கொடி கும்மி ஆட்டக்குழுவினரின் 123-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை 7- வது வார்டு கவுன்சிலர் கவிதா விஜயகுமார் தொடங்கி வைத்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு பாரம்பரிய பாடலுக்கு வள்ளி கும்மி நடனமாடினார்கள்.நிகழ்ச்சியில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பவளக்கொடி கும்மி ஆசிரியரும், திருப்பூர் மாவட்ட நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் மாவட்ட செயலாளருமான விஸ்வநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில் துணை ஆசிரியர் மணி, நிர்வாக குழு உறுப்பினர் கனகராஜ் உள்பட பயிற்சி ஆசிரியர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் 16-வது வார்டு கவுன்சிலர் தமிழ்செல்வி கனகராஜ், இந்திய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவருமான பாரி கணபதி, நஞ்சப்பா நகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 7-வது வார்டு கவுன்சிலர் கவிதா விஜயகுமார் மற்றும் கேசவன் செய்திருந்தனர். முன்னதாக விநாயகர் கோவில் இருந்து அரங்கேற்றம் நடைபெற்ற இடத்திற்கு பெண்கள் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்...

Tags:    

Similar News