ரயில் மோதி மயில் சாவு
அரக்கோணம் அருகே ரயில் மோதி மயில் உயிரிழந்துள்ளது.;
Update: 2024-06-07 09:59 GMT
மயில் பலி
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே மேல்பாக்கம் ரயில்வே யார்டு பகுதியின் தண்டவாளம் அருகே பெண் மயில் ஒன்று அந்த வழியாக வந்த ரயில் மீது மோதி இறந்து கிடந்தது.
இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்து கிடந்த மயிலை மீட்டு ராணிபேட்டை மாவட்ட வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.