மின்சாரம் தாக்கி மயில் பலி
வெள்ளகோவில் அருகே மின்சாரம் தாக்கியதில் மயில் பலியானது.;
Update: 2024-03-07 00:49 GMT
வெள்ளகோவில் அருகே மின்சாரம் தாக்கியதில் மயில் பலியானது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முத்தூர் சாலையில் உள்ள கள்ளுகுட்டை மேடு பகுதியில் நல்ல சிவம் என்பதற்கு சொந்தமான காடு உள்ளது. அந்த வழியாக செல்லும் மின் கம்பியின் மேலே நேற்று ஒரு மயில் பறந்து சென்றபோது கம்பியில் மோதி மின்சாரம் தாக்கி கீழே விழுந்து உயிர் இழந்து விட்டது.
இது குறித்து நல்ல சிவம் காங்கேயம் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.அங்கு வந்த வனகாவலர் சரவணன் சமூக ஆர்வலர் நாகராஜுடன் இணைந்து வெள்ளகோவில் அரசு கால்நடை மருத்துவமனைக்கு மயிலை எடுத்துச் சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் பகலவன் பிரேத பரிசோதனை செய்து சுமார் ஒரு வயதான இறந்து போன அந்த பெண் மயில் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.