விதிமுறைகளை பின்பற்றாத பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு
அபராதம் விதிக்கப்பட்ட பேருந்து
சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகளில் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் அதிக ஒளி வீசும் விளக்குகள் பயன்படுத்தப்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது. மேலும் போக்குவரத்து துறை ஆனையர் சார்பில் வாகனங்களை அடிக்கடி போக்குவரத்து துறையினர் கண்கானிக்கவும் உத்ததவிட்டிருந்த நிலையில் இன்று சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் மற்றும் ஆய்வாளர் மாணிக்கம் தலைமையிலான குழுவினர் சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் இரண்டு அரசு பேருந்துகளும், 5 தனியார் பேருந்துகளிலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் அதிக ஒளி வீசும் விளக்குகள் பயன்படுத்தப்பட்டதும் அதேபோல் ஓட்டுநர்கள் தங்களது பெயர்கள் பொறிக்கப்பட்ட பேட்ச்கள் அனியாமல் விதிமுறைககை மீறியது தெரியவரவே அவர்களுக்கு ரூ17.500 அபராதம் விதிக்கப்பட்டது.