மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த தொழிலாளிக்கு அபராதம்
தக்கலை அருகே போலீசார் வாகன சோதனை மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த தொழிலாளிக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனார்.;
Update: 2024-05-23 13:12 GMT
தக்கலை அருகே போலீசார் வாகன சோதனை மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த தொழிலாளிக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனார்.
தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் வெள்ளரி ஏலா பகுதியில் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பத்மனாபபுரத்தில் இருந்து தக்கலையை நோக்கி தள்ளாடியபடி ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் அதிக மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வந்தது தெரியவந்தது. பின்னர் அவரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். பின்னர் தக்கலை காவல் நிலையத்தில் கொண்டு வந்தனர். விசாரனையில் அவர் தக்கலை அருகே பூக்கடை ஆயிரம் பிலாவிளை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். ரூ.13,000 அபராதம் விதித்தனர்.