உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட கனரக வாகனங்களுக்கு அபராதம்

சிவகங்கை பகுதியில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட கனரக வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்

Update: 2024-04-14 05:14 GMT

போக்குவரத்து 

சிவகங்கையில் கனரக வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்ததை தொடர்ந்து, சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளர் சிபிசாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில், சிவகங்கை போக்குவரத்து காவல் ஆய்வாளர் லிங்கம் அறிவுறுத்தலின்படி, போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் அழகுராணி மற்றும் போக்குவரத்து காவலர்கள் கோட்டை முனியாண்டி கோவில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கனரக வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்தனர். அதில் இன்சூரன்ஸ் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட இரண்டு கனராக வாகனங்கள் மீது சுமார் 3,000-த்தில் இருந்து 4 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உரிய ஆவணங்கள் இன்சூரன்ஸ் இல்லாத கனரக வாகனங்கள் சிவகங்கை பகுதியில் இயக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News