நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தபட்ட தனியார் பேருந்திற்கு அபராதம்!

கோவையில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய பேருந்துக்கு 2000 ரூபாய் அபராதம் போலீசார் விதித்தனர்.

Update: 2024-06-20 07:53 GMT

கோவையில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய பேருந்துக்கு 2000 ரூபாய் அபராதம் போலீசார் விதித்தனர்.


நோ பார்க்கிங்கில் நிறுத்திய பேருந்துக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்த போலீசார்! கோவையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையம் வழியாக புறநகர் மற்றும் மாநகர பேருந்துகள் ஏராளமாக வந்து செல்கின்றன.மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம்,மாநகர காவல் ஆணையர் அலுவலகம்,நீதிமன்றம் என அருகருகே உள்ள நிலையில் காந்திபுரம் மற்றும் அவினாசி சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்லும்.குறிப்பாக ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் அருகில் உள்ள பேருந்து நிறுத்தும் இறங்கி ரயில் நிலையத்திற்கு செல்வது வழக்கம்.

பெரியநாயக்கன்பாளையம் பாளையத்தில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் 11 எண் கொண்ட பேருந்துகளின் கடைசி நிறுத்தம் ரயில் நிலையமாக உள்ளது. ரயில் நிலையம் அருகே போதிய இடவசதி இல்லாமலும் குறுகிய சாலையாக இப்பகுதி உள்ள நிலையில் இங்கு வரும் வாகனங்கள் நடுவழியில் வாகனங்களை நிறுத்துவதால் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கால் டாக்சி,ஆட்டோ ஸ்டேண்ட்,பேருந்துகள் ஒரே இடத்தில் நிற்பதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்று.பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.போக்குவரத்தை சீர் செய்ய காவலர்கள் முயன்றாலும் இதற்கான நிரந்தர தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.

இந்நிலையில் இன்று ரயில் நிலையம் அருகே தடம் எண் 11 தனியார் பேருந்து ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் நோ பார்க்கிங் பகுதியில் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட அங்கு வந்த போக்குவரத்து போலீசார் தனியார் பேருந்திற்கு 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யார் செயல்பட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News