பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

ஆர்க்காடு பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Update: 2024-07-04 17:43 GMT

பிளாஸ்டிக் பறிமுதல் 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி ஆணையாளர் வெங்கட்லட்சுமணன் உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சத்தியமூர்த்தி மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆற்காடு பஜார் வீதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடை உரிமையாளர்களிடம் தெரிவித்தனர்.

Tags:    

Similar News