ஆட்டோ ஓட்ட தெரியாதவருக்கு அபராதமா? விசாரணை

பழனி அருகே ஆட்டோ ஓட்ட தெரியாதவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.;

Update: 2024-02-20 11:47 GMT

ஆட்டோ ஓட்ட தெரியாதவருக்கு அபராதம்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட காளிமுத்து பிள்ளை சந்தை சேர்ந்தவர் தங்கரத்தினம். தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இருசக்கர வாகனம் ஒன்று வைத்துள்ளார். இவரது இருசக்கர வாகன எண்ணை ஆட்டோ எண்ணாக மாற்றி திண்டுக்கல்லில் வசித்து வருபவருக்கு பழனியில் அதிக பாரத்துடன் ஒருவர் ஆட்டோ ஓட்டி வந்தார். ரூ 200 அபராதம் விதித்து அவரது தொலைபேசி எண்ணுக்கு அபராத தொகை கான காவல்துறை வாகன ரசீதை அனுப்பி உள்ளார்கள். ஆட்டோ ஓட்டத் தெரியாத எனக்கு அதிக பாரத்துடன் ஆட்டோ ஓட்டி வந்ததாக தனது இருசக்கர வாகன எண்ணை பயன்படுத்தி அபராதம் விதித்ததால் இருசக்கர வாகனம் வைத்திருந்தவர் அதர்ச்சி அடைந்தார்.
Tags:    

Similar News