குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகள் வந்ததால் மக்கள் அச்சம்

கோவை அருகே குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகள் வந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

Update: 2024-06-09 16:23 GMT

சாலையில் புகுந்த யானைகள்

கோவை மாவட்டம் தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பழனியப்பா லே-அவுட் பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நான்கு காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்துள்ளது.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகளை விரட்டிய சிறிது நேரத்திலேயே அங்கு ஒரு காட்டு பன்றியும் திடீரென வந்ததால் அங்கிருந்த தெரு நாய்கள் காட்டு பன்றியை துரத்தின.

சிறிது நேரத்தில் அந்த காட்டு பன்றி வனப்பகுதிக்குள் சென்றது. இப்பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்பு சிறுத்தை ஒன்று கோழியை பிடித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் அடிக்கடி வனவிலங்குகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி இங்கு வருவதாகவும் வனத்துறையினர் இப்பகுதியில் ண்காணிப்பு பணிகளை தீவிர படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News