குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதி !
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சியில் குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-07-16 06:15 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சியில் குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதி திருமருகல் ஊராட்சியில் குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறைந்த மின் அழுத்தம் நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி பகுதிகளான கீழக்கரையிருப்பு, பெரியகுளத்தாங்கரை பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குறைந்தழுத்த மின்சாரம் வருவதால் மின் சாதனப் பொருட்கள் சேதமடைந்து வருகிறது.சீரான மின்சாரம் வராததால் இரவு நேரங்களில் கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரும் கொசுக்கடியிலும், புழுக்கம் காரணமாகவும் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளி கல்லூரி பயிலும் மாணவர்கள் தேர்வு நேரங்களில் விளக்கேற்றி வைத்து படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குறைந்த அழுத்த மின்சாரத்தால் வீடுகள், மற்றும் கடைகளில் பயன்படுத்தக்கூடிய பேன், மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு விடுகிறது.இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறுவதோடு இது சம்மந்தமாக பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சீர் செய்யவில்லை.கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த குறைந்தழுத்த மின்சாரம் மேலும் அவதிக்குள்ளாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதிக்கு சீரான மின்சாரம் வினியோகம் செய்திட சம்மந்தப்பட்ட துறையின் மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.