ராமநாதபுரம் அருகே பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை

பரமக்குடி அருகே புதூர் வலசை கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இருபுறமும் கயிறு கட்டி ஆபத்தான முறையில் கிராம மக்கள் கால்வாயை கடந்து வருகின்றனர்.

Update: 2023-11-27 16:18 GMT

ஆற்றைக் கடந்து செல்லும் மக்கள்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது புதூர் வலசை கிராமம். இக்கிராமத்தின் நடுவே வைகை ஆற்றில் இருந்து ஆர்எஸ் மங்கலம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய்க்கு தென்புறமாக 150 குடும்பங்களும், வடபுரமாக 30 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். கால்வாயின் தென்புறமாக உள்ள குடியிருப்புகள் ராமநாதபுரம் மாவட்டத்திலும், வடபுறமாக உள்ள குடியிருப்புகள் சிவகங்கை மாவட்டத்திலும் உள்ளது.

இதனால் ஆண்டுதோறும் கால்வாயில் தண்ணீர் செல்லும் போது இருபுறமும் கயிறு கட்டி ஆபத்தான முறையில் பொதுமக்கள் கால்வாயை கடந்து வருகின்றனர். தற்போது வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கால்வாயில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்கிறது.

இதனால் கால்வாயில் இருபுறமும் கயிறு கட்டி ஆபத்தான முறையில் கால்வாய் கடந்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு கயிறை பிடித்தபடி கால்வாயை கடக்கின்றனர். மருத்துவ உதவி உள்ளிட்ட அவசர சூழ்நிலைகளில் கால்வாயை கடப்பது சிரமமாக உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பாக கால்வாயில் தண்ணீர் சென்றபோது பாம்பு கடித்து ஒரு சிறிய குழந்தை உயிரிழந்தது அவசரத்திற்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

புதூர் வலசை கிராமத்தில் கால்வாயில் மேம்பாலம் அமைத்து தர கோரி 20 ஆண்டுகளுக்கு மேலாக ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எவ்வித வருடத்தை கிராமத்தில் உள்ள கால்வாயில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News