மாமல்லபுரம் அருகே தொலைபேசி திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது
மாமல்லபுரம் அருகே தொலைபேசி திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-05 17:08 GMT
கோப்பு படம்
மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில் உள்ள தனியார் கடற்கரை விடுதியில், உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த கமல்குமார், 29, என்பவர் பணிபுரிகிறார்.
மார்ச் 30ம் தேதி நள்ளிரவு, தன்னுடன் பணிபுரியும் சிலருடன், கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றார். இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர், அவர்களை தாக்கி, நவநீத் என்பவரின் 10,000 ரூபாய் மதிப்பு விவோ கைபேசியை பறித்து தப்பினர். இது குறித்து, மாமல்ல புரம் போலீசில், அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், கேளம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 24, மற்றும் 15 வயது முதல் , 18 வயது வரை உள்ள மூன்று சிறுவர்கள் பிடிபட்டனர்.