மின்கம்பத்தால் சிவகாசி மக்கள் அச்சம்

மிக மோசமான மின் கம்பத்தால் சிவகாசி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2024-04-27 15:03 GMT
மிக மோசமான மின் கம்பத்தால் சிவகாசி மக்கள் அச்சம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர் காவல் நிலையம் அருகே அபாய நிலையிலுள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை. நகரின் மைய பகுதியிலிருக்கும் காவல் நிலையம் அருகே எண்ணெய் கடை முக்கு செல்லும் சாலையில் பழமை வாய்ந்த கிருஸ்தவ ஆலயம்,பலசரக்கு கடைகள்,சிறு தொழில் செய்யும் கடைகள் என பல உள்ளன.

இந்தப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் அமைக்கப்பட்ட இந்த மின் கம்பம் அடி மற்றும் மேல் பகுதிகள் மிகவும் சேதம் அடைந்து அபாய நிலையில் காணப்படுவதால்,மின் கம்பத்தை சுற்றியுள்ள கடைகள் சாலையோர வாகன ஓட்டிகள் எப்போது விழும் அச்சத்திலேயே இருக்கின்றனர்.மேலும் அந்த பகுதி மக்கள் கூறும்போது,இந்த அபாய மின் கம்பத்தை மாற்றக் கோரி மின்வாரிய அலுவலகத்தில் தொடர்ந்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இந்த மின்கம்பம் சிதிலமடைந்து மோசமான நிலையில் இருக்கிறது.சிமென்ட் பூச்சுகள் கொட்டி,கம்பிகள் வெளியே தெரிகின்றது, எங்களுக்கு பயமாக இருக்கிறது. இந்த மின் கம்பம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ,மாணவிகள் இந்த மின் கம்பத்தை கடந்து செல்கின்றனர்.எனவே அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News