ஆக்கிரமிப்பு அகற்ற முயன்றபோது பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாயை முறையாக அமைக்காத அரசு, ஆக்கிரமிப்பு அகற்ற முயன்றபோது பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2024-04-25 01:24 GMT

மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாயை முறையாக அமைக்காத அரசு, ஆக்கிரமிப்பு அகற்ற முயன்றபோது பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் எலப்பாக்கம் கூட்டுச் சாலையில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்திற்கு மாநில நெடுஞ்சாலையின் இரு பக்கமும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் இடது பக்கம் முழுவதும் மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் முழுதும் அமைக்கப்பட்டுள்ளது. வலது பக்கத்திற்கான கழநீர் மற்றும் மழைநீர் கால்வாய் எடுப்பதற்கான பணிகளுக்கு முன்னதாக ஆக்கிரப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சாலையின் இரு பக்கமும் சரியான அளவீட்டின் மூலம் மழை நீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் மேற்கொள்ளப்படவில்லை என கடந்த 10 தினங்களுக்கு முன்பாக மாநில நெடுஞ்சாலை துறையில் உதவி பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று காலை கலைஞர் நகர் பகுதியில் மீண்டும் சாலையின் வலது பக்கம் உள்ள பகுதியில் சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் தனது பணியாளருடன் ஜேசிபி எந்திரத்தை கொண்டு வந்து ஆக்கிரப்பை அகற்ற முயலும் போது பொதுமக்கள் சரியான முறையில் அளவிடு செய்து காலை அமைப்பதற்கான பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வந்து சாலை பணியினை மேற்கொள்ள வரும் பொழுது பொதுமக்களை மரியாதை குறைவாக தரக்குறைவாகவும் பேசி உதவி செயற்பொறியாளர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது பொதுமக்கள் கூச்சல் போட அதிகாரிகள் ஓடிவிட்டனர். அதன் பின்னர், சிறிது நேரம் கழித்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வருகை தந்து ஜேசிபி இயந்திரம் கொண்டு அப்பகுதியில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்ற முயலும் போது பொதுமக்களில் ஒருவர் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்தார். அதன் பின்னர், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேசிய பின்னர் 2 நாட்கள் பொது மக்களுக்கு அவகாசம் வழங்கிய பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்..

Tags:    

Similar News