தருமபுரியில் வெப்பத்தால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்: வெறிச்சோடிய சாலைகள்
தர்மபுரியில் 102 டிகிரி செல்சியஸ் வெப்பம் வீட்டுக்குள் முடங்கிய பொதுமக்கள் வெறிச்சோடி காணப்பட்ட முக்கிய சாலைகள்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-21 14:38 GMT
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி நகரப் பகுதிகளில் தினந்தோறும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை நாட்கள் விடுமுறை தினம் என்பதால் அதிக அளவில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டு வரும் நிலையில் இன்று தர்மபுரியில் 102 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியதையடுத்து பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
குறிப்பாக தர்மபுரி நான்கு ரோடு, அரசு மருத்துவமனை, இலக்கியம்பட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலான சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.