சாலையில் மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி

மேட்டூர் அருகே மேச்சேரியில் சாலையில் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

Update: 2024-05-22 13:30 GMT

 மேட்டூர் அருகே மேச்சேரியில் சாலையில் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். 

மேட்டூர் அருகே மேச்சேரி 11 வது வார்டு அண்ணா நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக அப்பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கழிவு நீர் கால்வாயை முறையாக தூர் வாராததால் மழைக்காலங்களில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் தேங்கி நின்றதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த சாலை வழியாக நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. எனவே மழை நீர் கால்வாயை முறையாக தூர்வாரி சாலையில் தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்ற பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
Tags:    

Similar News