தை அமாவாசையை முன்னிட்டு பவானி கூடுதுறையில் குவிந்தனர்

தை அமாவாசையை முன்னிட்டு பவானி கூடுதுறையில் தர்ப்பணம் கொடுக்க பத்தர்கள் குவிந்தனர்.

Update: 2024-02-09 04:56 GMT

ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் அதன்படி இன்று தை அமாவாசையை முன்னிட்டு, பவானி, காவிரி மற்றும் கண்ணுக்கு புலம்படாத அமிர்நதிகள் சங்கமிக்கும் இடமான பவானி கூடுதுறையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

அப்போது, அக்கோயிலில் உள்ள பரிகார மண்டபங்கள் மட்டுமன்றி, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பரிகார கூடங்களிலும் பொதுமக்கள், தங்களது மூதாதையருக்கு திதி, பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற பரிகாரங்களும், தோஷ நிவர்த்தி பூஜைகளும் செய்து, ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர். இந்த தினத்தையொட்டி ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்துள்ளதால், அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்க, சிசிடிவி கேமராக்கள் பொருத்துப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News