நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த நபர்கள் கைது

ஒகேனக்கல்லில் மான் வேட்டைக்காக பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-06-20 07:43 GMT

பைல் படம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஓகேனக்கல் அருகே மான் வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி வனசரக அலுவலர் (வனப்பாதுகாப்பு படை) ஆலயமணிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அவர் மற்றும் அலுவலர்கள் ஒகேனக்கல் நாடார்கொட்டாய் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் சோமு என்பவர் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.

Advertisement

இதையடுத்து அவரது தோட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு நாட்டுதுப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததும், அதனை மான் வேட்டைக்காக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர்.சோமு அவருக்கு உடந்தையாக இருந்த மாரிமுத்து அருள்செல்வம் ஆகிய 3 பேரையும் பிடித்து, ஒகேனக்கல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவலர்கள் அவர்கள் மூவரின் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள் வருகின்றனர்.

Tags:    

Similar News