மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்தவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

என்எல்சி நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்

Update: 2023-12-16 03:50 GMT

மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வந்தவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தின் ராட்சத இயந்திரங்கள் மூலம் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளான வளசரவாக்கம், வேளச்சேரி, ஆவடி மாநகராட்சி, திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீரை முழுவதுமாக அப்புறப்படுத்தி நெய்வேலி திரும்பிய என்.எல்.சி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அடங்கிய குழுவினர் பாக்கியநாதன், பொ.புகழேந்தி, சந்திரசேகர், அறிவழகன் , வாசுதேவன் , சிவகுமார் ,நெடுஞ்செழியன், செந்தமிழ் செல்வன் , மணி ஆகியோர் அடங்கிய 56பேரை நெய்வேலி என்.எல்.சி நிறுவன அதிபர் மற்றும் நிர்வாக இயக்குனர் மோட்டுப் பள்ளி ஸ்ரீ பிரசன்னகுமார் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.உடன் மனிதவள இயக்குநர் சமீர் ஸ்வரூப், திட்டமிடல் மற்றும் செயலாக்க இயக்குனர் மோகன் ரெட்டி மின்துறை இயக்குனர் வெங்கடாசலம், சுரங்கத்துறை செயல் இயக்குனர்கள் ஜாஸ்பர்ரோஸ், ராஜசேகர் ரெட்டி மற்றும் என்எல்சி உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News