வீட்டுமனை பட்டா கோரி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

மயிலாடுதுறையில் வீட்டுமனைப் பட்டா கோரி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2024-02-19 09:00 GMT

மயிலாடுதுறையில் வீட்டுமனைப் பட்டா கோரி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்‌.

மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்று இந்த போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மூலம் மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு வீடு மற்றும் வீட்டுமனை, பட்டா கேட்டவர்களுக்கும் உடனே வீட்டு மனை, பட்டா வழங்கிட வேண்டும், மாற்றுத்திறனாளி குடும்பம் அனைவருக்கும் ஏ.ஏ.ஒய் (AAY) கார்டு வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவின்படி மனு கொடுத்தவர்களுக்கு உடனடியாக ஏ.ஏ.ஒய் (AAY) கார்டு வழங்கிட வேண்டும், வங்கி கடன் கேட்ட அனைவருக்கும் வங்கி கடன் அலைச்சல் இல்லாமல் கிடைக்க உத்தரவாதம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 100க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். புருஷோத்தமன் மாவட்ட பொருளாளர், லட்சுமி மாவட்ட துணைத் தலைவர், கோவிந்தசாமி மாவட்ட துணை செயலாளர், சொக்கலிங்கம் மாவட்டத் துணைத் தலைவர், ராஜேந்திரன் மாவட்ட துணை செயலாளர், பாரதிராஜா, ஜெயக்குமார், மகேஷ், பிரபுதாஸ் உட்பட பலர் விளக்க உரையாற்றினர். ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு காத்திருப்போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News