திருமண வாழ்வில் இணைந்த மாற்றுத்திறனாளிகள்!

குடியாத்தத்தில் இரு மாற்றுத்திறனாளிகள் திருமண பந்தத்தில் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-17 06:33 GMT

சரவணன்,கீர்த்தனா தம்பதி 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கல்லூர் சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (32).இவர் சிறுவயதில் போலியாவால் கால்கள் செயலிழந்த நிலையில் 12 ம் வகுப்பு வரை படித்து தற்போது தனியாக குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் சொந்தமாக டீக்கடை நடத்தி வருகிறார்.

குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த கீர்த்தனா (22).இரண்டரை அடி உயரமே உள்ள மாற்றுத்திறனாளியான இவர் பிஏ பட்டப்படிப்பு படித்துள்ளார்.இதனிடையே சரவணனுக்கும் கீர்த்தனாவும் திருமணம் செய்ய குடும்பத்தார் வரன் தேடி வந்த நிலையில் சரவணனுக்கும் கீர்த்தனாவுக்கும் பெரியோர்களால் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பகுதியில் உள்ள செல்வபெருமாள் ஆலயத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

 இதனிடையே போலியாவால் கால்களை இழந்த மணமகனுக்கும், இரண்டரை அடி உயரமுள்ள மாற்றுத்திறனாளி பெண்னுக்கும் நடைபெற்ற இந்த திருமணத்தில் கலந்து கொண்ட பெரியவர்கள் வாழ்க்கை வாழ உடல் குறைபாடு தடையில்லை என மணமக்களை வாழ்த்தினர். 

Tags:    

Similar News