மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

Update: 2023-12-11 17:26 GMT

மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 630 மனுக்களை நேரில் பெற்றுக்கொண்டார். மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 630 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டு பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின் படி செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 42 மனுக்களும், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 54 மனுக்களும் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வி.வெற்றிவேல், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தீபசித்ரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவா, மாவட்ட பழங்குடி நல அலுவலர் செந்தில் குமார் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News