மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 400 மனுக்கள்
By : King 24x7 Website
Update: 2023-12-12 03:42 GMT
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதி சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர், சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400 மனுக்கள் கொடுத்தனர். அதேபோல், மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, குறைகளை கேட்டு அவர்களிடம் 14 கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அவர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மயில் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.