விருதுநகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.;
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் மானிய திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.10,80,000 மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடனுதவிகளையும்,
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.10 இலட்சம் மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடனுதவியையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 5 பயனாளிகளுக்கு விலையில்லா தேய்ப்பு பெட்டிகளையும், 4 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களையும்,
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.13,700/- மதிப்பில் மொத்தம் ரூ.2,74,000/- மதிப்பிலான விலையில்லா திறன்பேசி (Smartphone)களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.