மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் !
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.
By : King 24x7 Angel
Update: 2024-03-15 06:30 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். நேற்று ஒரே நாளில் 28 மனுக்கள் புறப்பட்டது. இதில் சொத்து வரி, தெருவிளக்கு பிரச்சனை, வடிகால் சீரமைப்பு தொடர்பாகமனுக்கள் அளிக்கப்பட்டது. அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மேயர் மகேஷ் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி பணியாளர் பாலசுப்பிரமணியன், . மாநகர் நல அதிகாரி ராம்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் மேயர் மகேஷ் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் செயல்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.