எஸ் பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை !
நாகர்கோவிலில் எஸ் பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-07-04 06:08 GMT
மக்கள் குறை தீர்க்கும் நாள்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள். இதில் தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பையா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கம்பம் சாமுவேல் பிரவீன் கௌதம் , நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.யாங்சென் டோமா பூடியா மற்றும் அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள்,காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.