காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி பங்கேற்பு!
தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.அதன்படி புதன்கிழமையான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மனு கொடுக்க வந்த 50 மனுதாரர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். மனு கொடுக்க வந்த வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரை தளத்திற்கு சென்று புகார் மனுவை பெற்றுக் கொண்டார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.