மக்கள் நேர்காணல் முகாம்
கீழையூர், திருப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 91 பயனாளிகளுக்கு சுமார் ரூ.38 லட்சத்து 18 ஆயிரத்து 129 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.;
Update: 2024-01-26 02:44 GMT
நலத்திட்ட உதவிகள்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது தாட்கோ தலைவர் மதிவாணன் வட்டார ஆத்மா குழு தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் ஒன்றிய குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர் கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷ் வரவேற்றார்மக்கள் நேர்காணல் முகாமிற்கு நாகை கலெக்டர் ஜானி ஜாம் வர்கீஸ் தலைமை தாங்கி 91பயனாளிகளுக்கு சுமார் ரூ.38 இலட்சத்து 18 ஆயிரத்து 129 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் தாட்கோ கடன் உதவிகளையும் வழங்கி பேசினார் இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்க ண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா சத்யராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்வெற்றிசெல்வன் மற்றும் அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.