ராசிபுரத்தில் மக்கள் திட்ட தொடர்பு முகாம்

ராசிபுரத்தில் மக்கள் திட்ட தொடர்பு முகாம் - இராஜேஸ்குமார் எம்.பி பங்கேற்றார்;

Update: 2023-11-29 18:07 GMT

ராசிபுரத்தில் மக்கள் திட்ட தொடர்பு முகாம் - இராஜேஸ்குமார் எம்.பி பங்கேற்றார்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், தொப்பப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், தொப்பப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில், 64 பயனாளிகளுக்கு ரூ.35.35 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

குழந்தைகள் நல மையம் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம், வருவாய்த்துறை சார்பில் பட்டா, நத்தம் பட்டா மாறுதல், பட்டா மாறுதல் ஆணை, மனைவரி தோராயபட்டா, வாரிசு சான்றுகள், வேளாண்மைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 64 பயனாளிகளுக்கு ரூ.35.35 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆர்.என்‌. இராஜேஸ்குமார்‌, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி முன்னிலையில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் .த.இராமலிங்கம் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News