இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மக்கள் ஒற்றுமை ஜோதி பயணம்
திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகர பேரவையை முன்னிட்டு மக்கள் ஒற்றுமை ஜோதிப் பயணம் நடைபெற்றது.;
Update: 2024-02-26 07:20 GMT
மக்கள் ஒற்றுமை ஜோதி பயணம்
திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகர பேரவையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை குமரன் பூங்காவில் மக்கள் ஒற்றுமை ஜோதிப் பயணம் துவங்கியது. திண்டுக்கல் மாமன்ற மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் ஜோதிசுடரை எடுத்துக்கொடுத்து மக்கள் ஒற்றுமை ஜோதிப்பயணத்தை துவக்கி வைத்தார். ஜோதி பயணம் பேகம்பூரில் நகரப் பேரவை நடைபெறும் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தை அடைந்தது. பின்னர் நடைபெற்ற பேரவைக்கு பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பேரவையில் மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.