குமரி: ஒரே நாளில் 50 பேர் கைது

குமரி மாவட்டத்தில் மதுபானம் விற்ற வழக்கில் ஒரே நாளில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-06-24 11:57 GMT
பைல் படம்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனையை ஒழிக்கும் வகையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.      

கன்னியாகுமரி மாவட்டத்திலும் எஸ் பி சுந்தரவதனம் உத்தரவின் பெயரில் ஏடிஎஸ்பி தலைமையில் தனி படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரும்  இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.  குமரி மாவட்டத்தில் திருட்டுமது விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நாகர்கோவில், வடசேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நாடான்குளம், கிறிஸ்து நகர், அருகு விளை உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு மது  விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு புகார் அளித்தும்  நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் எழுந்தது.         இன்று மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் திருட்டு மது விற்றதாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வீடுகளில் பதுக்கி மதுபானங்கள் விற்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடமிருந்து 400 மது பாட்டில்கள் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.      இது தொடர்பாக அந்தந்த காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதானவர்கள் ஜாமீனில் விடுதலையும் செய்யப்பட்டனர்.       இது போன்று மலையோர கிராமங்களிலும் மதுவிலக்கு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார், சிறப்பு உளவு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News