பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் பிறந்த நாள் : நிர்வாகிகள் வாழ்த்து
பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.;
பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஏப்ரல் ஒன்றாம் தேதி பிறந்தநாள் காணும் அவர் பெரம்பலூர் பாலக்கரை திமுக அலுவலகத்தில், அங்கு வந்திருந்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திமுக முதன்மை செயலாளர் கே.என். நேருவிடம், வாழ்த்து பெற்றார். அதனை தொடர்ந்து, திமுக அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மேலும் மாவட்ட அலுவலகத்திற்கு வந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அட்சயகோபால், வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோர்களை சந்தித்து தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பெற்றார் இதனைத் தொடர்ந்து திமுக கட்சி அலுவலகம் மற்றும் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.