சோமவாரத்தை முன்னிட்டு குகநாதீஸ்வரருக்கு வாசனை அபிஷேகம் .
By : King 24X7 News (B)
Update: 2023-11-21 09:19 GMT
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையான நேற்று சோமவாரம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி மூலவரான குகநாதீஸ்வரருக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மாபொடி, களபம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், விபூதி,
பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு அலங்கார தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து பள்ளியறை நிகழ்ச்சி நடந்தது. பல்லக்கில் சுவாமியின் திருப்பாதமும் அம்பாளின் சக்கரமும் வைத்து கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி 3 முறை சங்கு ஒலிநாதம் மற்றும் மணி ஓசை முழங்க வலம்வர செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.