சொத்து தகராறில் பெரியப்பாவை குத்திக் கொலை !

சொத்து தகராறில் பெரியப்பாவை குத்திக் கொலை செய்த நபரை வழக்கு பதிந்த போலீசார்தேடுகின்றனர்.

Update: 2024-06-15 05:10 GMT
 கொலை

செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார், துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, தர்காஸ் பகுதியில் வசித்தவர் உத்திராடம், 56; நங்கநல்லுார் பகுதி மின் வாரிய அலுவலக கேங்மேன். இவருக்கும், இவரது தம்பி சங்கர் என்பவருக்கும், குடும்ப சொத்துக்களை பாகம் பிரிப்பதில், நீண்ட நாட்களாக பிரச்னை இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை, தர்காஸ் பகுதியில் உள்ள ஏரிக்கு, இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக, உத்திராடம் சென்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த அவரது தம்பி சங்கரின் மகன் சுபாஷ், 22, பெரியப்பாவான உத்திராடத்தை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி படுகொலை செய்து, அங்கிருந்து தப்பினார்.

இதைக்கண்ட அப்பகுதிவாசிகள், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உத்திராடத்தின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்த போலீசார், தலைமறைவான சுபாஷை தேடுகின்றனர்.

Tags:    

Similar News