ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி: விவசாயிகள் மனு
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
Update: 2024-06-15 06:18 GMT
விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கலிவரதன் தலைமையில் செயலாளர் முருகையன், பொருளாளர் நாகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டுக் காக ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் ஏரிகள், குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படுவது வழக் கம். ஆனால் தற்போது விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி முறைகள் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை காரணமாக வைத்து வண்டல் மண் எடுக்க தடை விதிக்கும்பட்சத்தில் விவசாய பயன் பாட்டிற்கு வண்டல் மண் கிடைக்காமல் சிரமப்படும் நிலை ஏற்படும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், மாவட்டத்தில் உள்ள 750 ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தனர்.