தென்னை மரம் ஏறும் போது தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தென்னை மரம் ஏறும் போது தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
Update: 2024-03-11 12:47 GMT
கரூரை அடுத்த சணப்பிரட்டி, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கணேசன் வயது 51. இவர் கடந்த மார்ச் 10ஆம் தேதி காலை 7:30 மணி அளவில், சணப்பிரட்டி, பாரதியார் நகர் பகுதியில் உள்ள செல்லமுத்து என்பவரது வீட்டின் அருகாமையில் தேங்காய் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறி உள்ளார். தென்னை மரத்தில் ஏறிக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக கால் இடறி மரத்திலிருந்து கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த கணேசன் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கணேசனின் மகன் கௌதம் வயது 29 என்பவர், காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், உயிரிழந்த கணேசன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.