மாட்டு வண்டியில் செல்லும்போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு

கரூரில் மாட்டு வண்டியில் செல்லும்போது தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

Update: 2024-03-11 13:00 GMT

காவல்துறை விசாரணை

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா நெரூர் வடபாகம் பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி வயது 55. மாட்டு வண்டி உரிமையாளர். இவர் மார்ச் 6ஆம் தேதி மாலை 5 மணி அளவில் நெரூர் பகுதியில் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றார். அப்போது, அப்பகுதியில் உள்ள மயானம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென மாட்டு வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில்,அவருக்கு இடது இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவர்,சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாலுசாமி மகன் தியாஸ்குமார் வயது 24 என்பவர், காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த பாலுசாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, மதுரை ராஜாஜி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.
Tags:    

Similar News