விழுப்புரத்தில் உரிமமின்றி ரெயில் பயணச்சீட்டுகளை விற்றவர் கைது
விழுப்புரத்தில் உரிமமின்றி ரெயில் பயணச்சீட்டுகளை விற்றவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம்- கடலூர் பிரதான சாலையில் உள்ள ஒரு தனியார் வளாக கட்டிடத்தில் இயங்கி வரும் இணையவழி சேவை நிறுவனத்தில் உரிமமின்றி ரெயில் பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக விழுப்புரம் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த நிறுவ னத்தை சேர்ந்த பார்த்திபன் (வயது 42) என்பவர் எந்தவித உரிமமும் இன்றி தனது தனிப்பட்ட இணையதள முகவரியை பயன்படுத்தி ரெயில்வே பயணச்சீட்டுகளை இணையவழியில் பெற்று,அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந் தது தெரியவந்தது.
இதையடுத்து பார்த்திபனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.9,687 மதிப்புள்ள 3 இணையவழி ரெயில் பயணச்சீட்டுகள், 3 காலாவதியான ரெயில் பயணச்சீட்டுகள் மற்றும் தொடர் புடைய பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.