மத்திய குழுவிடம் விவசாய சங்கத்தினர் மனு

நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து மத்திய குழுவிடம், காஞ்சிபுரம் விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.

Update: 2023-12-16 11:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் மழையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழு நேற்று வருகை புரிந்தது. அப்போது தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் நேரு தலைமையில் குழுவினர் அமரம்பேடு பகுதியில் பார்வையிட வந்த மத்திய குழுவின் இடம் கோரிக்கை மனுவை ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல்மழையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள், விவசாய பயிர்கள். கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இன்னும் கூட பல பகுதிகளில் தண்ணீர் வடியவில்லை. மேலும் மனித உயிர்கள் இறப்பும். கால்நடைகள் இறப்பும். ஏரிகள் உடைப்பும் ஏற்பட்டு உள்ளது. எனவே, 4 மாவட்ட மக்களை பாதுகாத்திடவும், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும், ஏரிகள், சாலைகள், பொது அரசு கட்டிடங்கள். பள்ளிக்கூடங்கள் புதுப்பிக்கவும் தமிழக அரசு கேட்டு இருக்கும் மழை நிவாரணம் நிதி ரூ.5060 கோடி ஒதுக்கீடு செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் மழையால் நெல் பயிர்கள் 10,000 ஏக்கருக்கு மேல் மழை வெள்ளத்தில் அழுகி வருகிறது. இந்த நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தவை. மேலும் காய்கறி பயிர்கள், கரும்பு. வேர்கடலை. வாழை, சாலைகள், ஏரிகள் உடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News