கையாடல் செய்ததாக ஊராட்சி மன்றத்தலைவர் மீது துணைத்தலைவர் புகார் மனு!

செல்லப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் கையாடல் செய்ததாக பெண் துணைத்தலைவர் நாமக்கல் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் புகார் மனு.

Update: 2024-02-05 09:36 GMT

பெண் துணைத்தலைவர் புகார் மனு!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சிக்குட்பட்ட செல்லப்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சத்யபாமா வேல்முருகன் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.

அதில் செல்லப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வரும் தியாகராஜன் என்பவர் ஊராட்சி நிதி வங்கி கணக்கு எண் 1 ல் உள்ள ரூ.3,73,168 ஐ முறைக்கேடாக கையாடல் செய்துள்ளார் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி நிதியை முறைக்கேடாக கைடால் செய்ததாக துணைத்தலைவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News