மணப்பாறை நகராட்சிக்கு நிரந்த ஆணையர் நியமிக்க கோரி மனு
பல நலதிட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளாதாக குற்றம் சாட்டியுள்ளனர்;
Update: 2023-12-10 11:38 GMT
மணப்பாறை நகராட்சிக்கு நிரந்தர ஆணையரை நியமிக்க கோரி மனு
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்கு நிரந்த ஆணையர் நியமிக்க வேண்டுமென கோரி நகராட்சி நிருவாக இயக்குநருக்கு மணப்பாறை சி.பி.ஐ(எம்.எல்) நகரக்குழு சார்பில் நகர செயலாளர் பாலு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள மனுவில், திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சிகளில் முதன்மையான நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. மணப்பாறை சட்டமன்ற தொகுதியையும் உள்ளடக்கியது. மணப்பாறை நகராட்சியில் ஆணையராக இருந்தவர் இரண்டு மாதங்களுக்கு புதுக்கோட்டைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பொறுப்பு ஆணையராக மணப்பாறை நகராட்சியையும் கவனித்து வருகிறார். மணப்பாறை நகராட்சிக்கு தனியாக ஆணையர் இல்லாத காரணத்தினால், நகராட்சிக்கு வரக்கூடிய வரிவசூல் ஆகாமல் தேங்கியுள்ளது. இது மட்டுமல்லாமல் பல திட்டங்கள் செயல்படுத்தாமல் நிலுவையிலுள்ளது. எனவே மணப்பாறை நகராட்சிக்கு நிரந்தரமான ஆணையரை நியமனம் செய்யுமாறு நகராட்சி நிருவாக இயக்குநர் மற்றும் நகராட்சி மண்டல இயக்குநர் ஆகியோரை சி.பி.ஐ (எம்.எல்) நகரக்குழு கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.