சிஐடியு சார்பில் ஆட்சியரகத்தில் மனு
சிஐடியு சார்பில் ஆட்சியரகத்தில் மனு
Update: 2024-06-15 07:20 GMT
பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் பணியின் போது விபத்து ஏற்பட்டதை, விசாரணை நடத்த கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிஐடியுவினர் மனு. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தொழிற்சங்கம் மையமான சிஐடியு சார்பில் அதன் மாவட்ட செயலாளர் அகஸ்டின் மற்றும் மாவட்டத் தலைவர் ரங்கநாதன் மற்றும் நிர்வாகி கலையரசி ஆகியோர் மனு அளித்தனர். அதில் பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் ராணி மற்றும் ராஜகுமாரி ஆகியோர் பணியின் போது வாகனத்தில் சென்ற பொழுது ரேடியேட்டர் வெடித்து காயம் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதோடு உடல்நலம் சரியாகின்ற வரையில் ஊதியத்தோடு விடுப்பு வழங்கிடவும், விபத்து குறித்து விசாரணை நடத்திடுமாறும் கேட்டுக்கொள்கிறோம். மேலும் பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள ஊதியம், பாதுகாப்புச் சாதரணங்கள் வழங்கப்படுவதில்லை என்று தொடர்ந்து முறையிட்டு வருகிறோம். எனவே பணிபுரியும் இடங்களில் பணி பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.என குறிப்பிடப்பட்டிருந்த மனுவினை வழங்கி சென்றனர்.